வேதங்கள் எழுத்துவடிவத்திற்கு வந்தது நவீன காலத்தில்தான், அதுவும் ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில், மேலும் இந்திய சமய நூல்கல் பலவற்றை கிருத்துவ பாதிரியார்களே பதிப்பித்துள்ளனர்,அல்லது கிருத்துவ மிஷனரிகள் மற்றும் ஏகாதிபத்திய அரசுகளின் ஆதரவாளர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளன, அவர்களது உண்மையான நோக்கம் ஞானத்தைப்பரப்புவது அல்ல இந்த தேசத்தின் தொன்மையான கலாச்சாரத்தை பழிப்பது,அதன் தொடர்ச்சியை குழப்புவது. ஆகவே அவற்றில் இடை செருகல்கள் இருக்கலாம்.
வேதம் மற்றும் வேத கருத்துக்கள் பற்றி ஆராய, விவாதம் செய்ய தகுதி உடையவர்கள் சமஸ்கிருத புலமை உடைய,முறையான வழியில் வேதம்கற்ற ஆன்மிக வாதிகள் மட்டுமே. உண்மையில் நமக்கு அந்த அதிகாரம் இருப்பதாகத் தெரியவில்லை, உங்களது எளிய கேள்விக்கு எனது சிற்றரிவிக்குப்பட்ட பதிலைத் தந்துள்ளேன். அதுவும் வேதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு.
பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள், வலைத்தளப்பதிவுகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் மூலம் வேதம் கற்க முடியாது. அது முறையான வழி அல்ல. தகுந்த ஆசிரியரின் கீழ் குருகுலத்தில் கற்பதுதான் வேதம். அதுதான் முறையானது அதிகாரப்பூர்வமானது, அப்படிக்கற்றவர்களே வேதத்திற்கு விளக்கம் சொல்ல முடியும்.
இந்துமத அறிவு, சமயப்பயிற்சி உடையவர்கள் கூட ( முறையான வேதம் கற்ற வேதியர் அல்லாதோர்) வேதங்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது என்னும் நிலை இருக்கும்போது, வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள், யாரோ ஒரு குழப்பவாதி உளரியவற்றை வைத்துக்கொண்டு வேதங்களையும், அவற்றின் தத்துவங்களையும் விமர்சிக்க முற்படுகின்றனர், அவ்வாறு செய்ய அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக